சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை, மந்தவெளி, எம்ஆர்சி நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை ரோகிணி திரையரங்கம் அருகே உள்ள சிக்னல், பச்சையப்பன் கல்லூரியின் பின் நுழைவாயில் சாலை, அண்ணாசாலை சந்திப்பு, மயிலாப்பூர் சிவசாமி சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மயிலாப்பூர், திருவள்ளுவர் சிலை அருகே வாகனத்தின் மீது முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டு வருகிறது.
நேற்று இரவிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என்று அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். தற்போது சென்னையில் மேற்குறிப்பிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம்போலவும், குளம்போலவும் தேங்கி நிற்பதால் அலுவலங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்,
Discussion about this post