மெரினா கடற்கரையில் உள்ள கடைகளுக்கு ரூ.1,500 வாடகை வசூலிக்க முடிவு

மெரினா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 900 கடைகளுக்கு மாதத்துக்கு 1,200 ரூபாய் வீதம் வாடகை வசூலிக்க முடிவெடுத்து உள்ளதாக சென்னை மாநகராட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு, நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், கடைகள் கொள்முதலுக்கான டெண்டர் அறிவிப்பாணை அரசிதழில் வெளியிட உள்ளதாகவும், மார்ச் மாத இறுதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்னர் மாதம்தோறும் 300 கடைகள் வீதம், மூன்று மாதத்திற்குள் 900 கடைகளை அமைக்க முடிவெடுத்துள்ளதாகத் கூறினார். இந்த 900 கடைகளை பொறுத்தவரை மோட்டார் பயன்படுத்தும் கடைகளுக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாயும், மோட்டார் பயன்படுத்தாத கடைகளுக்கு 1,500 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க உள்ளதாகவும், பராமரிப்பு செலவோடு சேர்த்து வாடகை கட்டணமாக மாதத்துக்கு 1 ஆயிரத்து 200 ரூபாய் வசூலிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version