சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுமதி

சென்னையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அனுமதி தேவையில்லை என்றும், அனைத்து வசதிகளும் இருந்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தொடங்கலாம் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, சென்னையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க தனியார் மருத்துவமனை மற்றும் விடுதிகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியது.

கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதி, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து மாநகராட்சியை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தனியார் விடுதிகள், மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருந்தால் கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கலாம் என்றும்,

மாநகராட்சியிடம் தகவல் மட்டும் தெரிவித்தால் போதும் என்றும் மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 இதனிடையே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைகளை கண்காணிக்கும் சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தரேஸ் அகமதுவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version