இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3 வயதே ஆன சென்னை சிறுவன்

இந்திய சாதனை புத்தகத்தில், சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுவன் இடம்பெற்றுள்ளான்.

அரிஜித் என்ற சிறுவன், 2 நிமிடம் 18 விநாடிகளில், 85 வாகன மாடல்களையும், அவற்றின் அடையாளங்களையும் கூறியுள்ளான்.

இதில், கார்கள், சரக்கு வாகனங்கள், இரட்டை அடுக்கு பேருந்து, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் சிறுவன் அடையாளப்படுத்தியுள்ளான்.

இதன் மூலம், அதிகபட்ச வாகன மாடல்களை கூறியதாக, மூன்று வயது சிறுவன் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளான்.

Exit mobile version