ஐபிஎல்: பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னை

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப் அணி சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சால் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

Exit mobile version