சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம் சுற்றுவட்ட ரயில் சேவை துவக்கம்

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு – அரக்கோணத்துக்கு சுற்றுவட்ட புறநகர் ரயில் சேவை இன்று துவங்கியது. செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் பயணிகள் மூர்மார்க்கெட் அல்லது கடற்கரை, ரயில் நிலையத்திற்கு வந்து பின்னர் அரக்கோணம் செல்லும் நிலை இருந்தது. இதையடுத்து சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு – அரக்கோணம் இடையில் சுற்றுவட்ட ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கு ரயில்வே வாரியமும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து சென்னை கடற்கரை – திருமால்பூர் – கடற்கரை மின்சார ரயில்கள் அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இதேபோல கடற்கரை – அரேக்கோணம் ரயில் திருமால்பூர், செங்கல்பட்டு வழியாக கடற்கரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தக்கோலம் – அரக்கோணம் இடையில் ரயில்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து இன்று சேவை துவங்கியுள்ளது.

இதனால் புறநகர் பயணிகள் கடற்கரையில் இருந்து நேரிடையாக செங்கல்பட்டு – அரக்கோணத்துக்கு எளிதில் செல்ல முடியும். இந்த புதிய சேவைக்கு புறநகர் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version