ராயப்பேட்டையில் இருச்சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

ராயப்பேட்டையில், குடிபோதையில் இருந்தவர் ஓட்டி வந்த கார் இருச்சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ராயப்பேட்டையை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் முகம்மது அப்துல் கையும் என்பவர், நேற்று முந்தினம் நள்ளிரவு ஜிபி ரோடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் இருச்சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் பலத்த காயமுற்ற முகம்மது அப்துல் கையும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரை மது போதையில் ஓட்டிவந்த விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version