செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனிடம் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி விசாரணை!

பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரில் செங்கல்பட்டு எஸ்.பி.யிடம் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி விசாரணை நடத்த உள்ளார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரை அடுத்து, டிஜிபி அந்தஸ்தில் இருந்த ஒருவர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சிபிசிஐடி பதிவுசெய்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. பெண் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்து, டிஜிபி-யாக இருந்த நபருக்கு உதவியதாக 3 எஸ்.பி.க்கள், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 15 பேரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 15 பேருக்கும் சம்மன் அனுப்பி காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனிடம், சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி விசாரணை நடத்த உள்ளார்.

 

Exit mobile version