செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் காரணமாக 25க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
கனமழையினாலும், அணைகளின் நீர் திறப்பாலும் செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
இதன் காரணமாக, திம்மாவரம், மகாலட்சுமி நகர், அம்பேத்கர் நகர், படவேட்டம்மன் நகர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து 25க்கும் அதிகமான வீடுகள் தண்ணீரில் மூழ்கின.
வீடுகளில் இருந்தவர்கள் திம்மாவரம் சமூக நலக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.