புதிய மாவட்டமாகும் செங்கல்பட்டு: இன்று தொடக்க விழா

செங்கல்பட்டு புதிய மாவட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மாவட்டத்தின் பணிகளை இன்று துவக்கி வைக்கிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டை பிரித்து புதிய மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. தனி மாவட்டம் அறிவிப்பு, செங்கல்பட்டு பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தனி மாவட்டம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டதை அடுத்து, மாவட்டத்திற்கான எல்லை வரையறை பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் மாவட்டத்தின் தொடக்கப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார். தொடக்க விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். துவக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உட்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். துவக்க விழாவையொட்டி செங்கல்பட்டு நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

முன்னதாக, துவக்க விழா நடைபெறும் மேடை மற்றும் அரங்கப் பணிகள் குறித்து அமைச்சர்கள் உதயகுமார், பெஞ்சமின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு அரசு உயர் அதிகாரிகளுடன் துவக்க விழா குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

Exit mobile version