மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருசக்கர வாகனங்கள்

கனமழையால் செங்கல்பட்டில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்தது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

செங்கல்பட்டில் வெளுத்து வாங்கிய கனமழையால் வரதராசனார் வீதி, வேதாசலம் நகர், ராட்டின கிணறு, அண்ணாநகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

image

மழை நீர் செல்ல வழியில்லாததால் தெருக்கள் ஓடைகளாக மாறியுள்ளன. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்துள்ளன.

ஆறு போன்று பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை ஒருசில ஆபத்தை உணராமல் கடந்து செல்லும் நிலையையும் அங்கு காண முடிகிறது.

 

Exit mobile version