செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியதால் கடந்த 7 ம் தேதி உபரி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்ட உயரம் 21புள்ளி33 அடியாகவும், நீர்வரத்து 405 கனஅடியாகவும், மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 934 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தற்போது உபரி நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிப்போருக்கும், தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.