சேலத்தில் ரசாயன கழிவுகளை டேங்கர் லாரியிலிருந்து திறந்து விட்டவர்களை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குடியிருப்பு பகுதிகளில் வெளியேறும் சட்டவிரோதமான ஆலைக்கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளால் திருமணிமுத்தாறு மாசைடந்து வருகிறது. இந்த நிலையில் கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட ரசாயன கழிவுகளை ஆற்றில் இருவர் திறந்து விட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கடுமையான நெடியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் வாகனத்தையும் சிறைபிடித்த மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ரசாயன கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.