செம்பரம்பாக்கம் ஏரி இரண்டாவது முறையாக இன்று திறக்கப்பட்டது!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 23 புள்ளி 5 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீர்மட்டம், 22 புள்ளி 15 அடியாக உள்ளது. இந்த நிலையில், ஏரியில் இருந்து இரண்டாவது முறையாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Exit mobile version