கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு பேரை சென்னை பூங்கா ரயில் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த இரண்டு வாலிபர்களை ரயில்வே போலீசார் விசாரித்து வந்தார். அப்போது அந்த வாலிபர்கள், போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோட முயன்றனர். பூங்கா ரயில் நிலையம் அருகில் உள்ள கூவம் ஆற்றில் குதித்து தப்பியோட முயன்ற அவர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தார். விசாரணையில் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த 3 கஞ்சா பொட்டலங்கள் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.