எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்காக ‘எச்-1 பி’ விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேர் இந்த விசாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இந்த விசாவுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், விண்ணப்பங்களை முன்கூட்டியே மின்னணு வடிவில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதி முறையை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.