தேர்தல் விண்ணப்பப் படிவத்தில் மாற்றம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் விண்ணப்பப் படிவத்தில் மாற்றம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விண்ணப்பப் படிவத்தில் அதிரடி மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது 5 வருட வருமான வரி தாக்கல் செய்ததற்கான சான்றிதழை சமர்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்றும், வேட்பாளர்களின் PAN CARD விவரங்களை தேர்தல் விண்ணப்பப் படிவம் 26ல் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version