கொரோனா பரவல் காரணமாக, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டு 1 மணி நேரம் தேர்வுகள் நடைபெற்றது. ஆனால், சில மாணவர்கள் சமூக வலைதலங்கள் மூலம் பதில்களை பகிர்ந்து முறைகேடு செய்ததாக
புகார் எழுந்தது. இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரவிருக்கும் செமஸ்டர் தேர்வுகளையும் ஆன்லைன் வாயிலாக நடத்த பல்கலைகழகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இம்முறை பாடப்புத்தகத்திலோ, குறிப்பு புத்தகத்திலோ நேரடி பதில்கள் இல்லாத, பகுப்பாய்வு வகையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய முறையில், நேரடி பதில்கள் கிடைக்காது என்பதால், பாட குறிப்புகளுக்காக மாணவர்கள் தேர்வின் போது புத்தகம் மற்றும் இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், முந்தைய நடைமுறையே பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.