சந்திராயன்-2 ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்

ஜூன் மாதம் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து நாளை காலை 5.27 மணிக்கு பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் ரிசாட் 2-பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களைப் வழங்கி கவுரவித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவன், ராணுவ பயன்பாட்டிற்காக ரிசாட் 2-பி செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதனிடையே ஜூன் 2ஆம் வாரத்தில் சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படும் என்று கூறிய அவர், இந்த செயற்கைகோள் செப்டம்பர் 6ஆம் தேதி சந்திரனில் இறங்கும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version