சந்திரயான்-3 செயற்கைக்கோள் திட்டம் வெற்றிகரமாக அமையும் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான் 2 செயற்கைக்கோள் மூலம் அனுப்பபட்ட ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், சந்திரயான்-3 செயற்கைக்கோள் திட்டம் வெற்றிகரமாக அமையும், என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் எட்டாவது புத்தக கண்காட்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு, மாணவர்களிடையே கலந்துரையாடினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், விண்வெளித்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று உள்ளதாகவும், இதன் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை செலுத்துவதால் அந்நியச் செலாவணி மிச்சப்படுத்தபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏவுதளம் அமைப்பது சிறப்பானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார். சந்திரயான்-2 மூலம் அனுப்பிய ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு வருவதால், சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக அமையும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

Exit mobile version