சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக மூன்றாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்டது.
3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான் 2 விண்கலமானது ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் கடந்த 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம் கடந்த புதன்கிழமை விண்கலத்தின் சுற்றுப்பாதை முதன்முதலாக உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி 2 ஆவது முறையாக சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக சந்திராயன் 2 விண்கலத்தின் சுற்றுப்பாதை ஒரு படிநிலைக்கு உயர்த்தப்பட்டது. தற்போது சந்திரயான் 2 விண்கலம் 71,792 கிலோமீட்டர் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு 14 ஆம் தேதி மீண்டும் விண்கலத்தின் பாதை உயர்த்தப்படும் பட்சத்தில் பூமியின் சுற்று வட்டப்பாதையிலிருந்து விலகி நிலவின் சுற்று வட்டப்பாதையை சென்றடையும்.