சந்திரயான்-2 விண்கலம், ஆக. 20 ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும்: இஸ்ரோ

 

சந்திரயான்-2 விண்கலம் வரும் 20 ஆம் தேதி நிலாவின் சுற்று வட்டப்பாதையை எட்டும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இதுவரை 5 முறை அதன் சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

வரும் புதன்கிழமை அதிகாலை மூன்றரை மணிக்கு புவி சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி, நிலாவை நோக்கி சந்திரயான் பயணிக்கும் என்றார். இதையடுத்து, 20 ஆம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என்று அவர் கூறினார்.

இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து செல்லும் விக்ரம் லேண்டர், நிலாவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் என்று சிவன் தெரிவித்தார்.

Exit mobile version