சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவை 7 ஆண்டுகள் சுற்றி வரும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 திட்டம் பற்றி மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் சந்திரயான் 2 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த அடக்கச் செலவு 603 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார். இந்த விண்கலத்தைச் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கு 367 கோடி ரூபாய் செலவானதாகவும் குறிப்பிட்டுள்ளார். துல்லியமான ஏவுதல், சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தல் உள்ளிட்டவற்றின் காரணமாக சந்திரயான் 2 ஆர்பிட்டரின் வாழ்நாள் 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.