சந்திராயன்-2 விண்கலம் செப். 7ம் தேதி நிலவில் ஆராய்ச்சியை தொடங்கும்: இஸ்ரோ

சந்திராயன்-2 விண்கலம், செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்டு, ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் என இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 22-ம் தேதி, சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. உலக நாடுகள் எதுவும் இதுவரை ஈடுபடாத நிலவின் தென் பகுதியை ஆராய்வதற்காக சந்திராயன்-2 செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் ஐந்து கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், கடந்த 13ம் தேதி விண்கலம் கடைசி வட்டப்பாதையை அடைந்ததாக இஸ்ரோ அறிவித்தது. தற்போது செப்டம்பர் 7ம் தேதி சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டு, ஆராய்ச்சியை தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Exit mobile version