சந்திராயன்-2 பின்னடைவை கேலி செய்த பாகிஸ்தான் அமைச்சர்

சந்திரயான் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் செளத்திரியின் கருத்துக்கு இந்திய இணைய வாசிகள் தக்க பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருப்பவர் ஃபவாத் ஹுசைன் செளத்திரி. சந்திராயன் 2-வின் பின்னடைவை கேலி செய்யும் விதமாக அவர் ட்வீட் செய்தார். சாட்டிலைட் என்னும் வார்த்தையை அவர் தவறாக குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இணையவாசிகள் அவரை வறுத்தெடுத்தனர். `ஒரு நாட்டின் தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கு சாட்டிலைட் என்ற வார்த்தையை கூட சரியாக எழுத தெரியவில்லை. முதலில் அதை கற்றுக் கொள்ளுங்கள் என்று அவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Exit mobile version