நிலவின் முதல் வட்டப்பாதையை சந்திரயான் 2 இன்று அடைய உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22ம் தேதி நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்கலத்தின் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டதை அடுத்து கடந்த 24ம் தேதி முதல் சுற்றுவட்டப்பாதையை கடந்தது. கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி 6-வது முறையாக விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தை, இன்று காலை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதற்காக சந்திரயானின் திரவ என்ஜின் இன்று இயக்கப்பட உள்ளதாகவும், இது மிகவும் சவாலான மற்றும் முக்கியமான நகர்வு என்பதால் அதற்கான பணிகளில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தீவிரம் காட்டி வருகிறது.