இன்னும் 11 நாட்களில் நிலவில் சந்திரயான்-2

சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் பகுதி இன்னும் 11 நாட்களில் நிலவில் தரையிறக்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 3ஆம் படி நிலைக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை இன்று காலை 9.04 மணி அளவில் குறைக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆயிரத்து190 விநாடிகள் நீடித்தது. நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை தற்போது குறைந்தபட்சமாக 179 கிலோ மீட்டரும் அதிகப்பட்சமாக ஆயிரத்து 412 கிலோ மீட்டராகவும் உள்ளது. இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை ஆகஸ்ட் 30ஆம் தேதி மீண்டும் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Exit mobile version