நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான் -2

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் – 2 விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இஸ்ரோ மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

கடந்த ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் – 2 விண்கலம், முதல் 22 நாட்கள் பூமியை சுற்றி வந்தது. பின்னர் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. இந்த நிலையில், இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2 வெற்றிகரமாக நுழைந்தது. இஸ்ரோ விஞ்ஞானிகள் கிரையோஜெனிக் இன்ஜினை இயக்கி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தினர். முதல் கட்டமாக நாளை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2 உயரம் குறைக்கப்படுகிறது. ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் படிப்படியாக சுற்றுப்பாதை குறைக்கப்பட்டு 100 கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்தப்படுகிறது. செப்டம்பர் 2ஆம் தேதி ஆர்பிட்டரில் இருந்து பிரியும் லேண்டர் 4 நாட்கள் நிலவை சுற்றிவரும். நிலவின் தென் துருவப் பகுதியில் செப்டம்பர் 7 அன்று லேண்டரான விக்ரம் தரையிறங்கும்.

Exit mobile version