சந்திரயான்- 2 தோல்வியால் ஆதித்யா செயற்கைக்கோள் பணிகள் தாமதம் -முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான் – 2 தோல்வியால், சூரியனை ஆராயும் ஆதித்யா செயற்கைக்கோளின் பணிகள் தாமதமாகியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை கொட்டிவாக்கத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்கலனால் செயல்படும் இரு சக்கர பசுமை வாகன விற்பனை மையத்தை விண்வெளி ஆராய்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பசுமை வாகன மையத்தை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சூரிய ஒளியினால், நவீன லித்தியம் ஐயன் பேட்டரிகளை இஸ்ரோ 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும்,சுற்று சூழலை பாதுகாக்கவும், அதற்கு அதிக அளவில் பசுமை வாகனங்கள் வாங்கவும், அனைவரும் முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். சந்திராயன் – 2 தோல்வியால், சூரியனை ஆராயும் ஆதித்யா செயற்கைக்கோளின் பணிகள்
தாமதமாகியுள்ளதாகவும், தொடர்ந்து ஆதித்தியா செயற்கைக்கோள், சந்திரயான் -3  என புதிய திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version