டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்ததால் தேசிய அரசியலில் பரபரப்பு

டெல்லியில் பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா சட்டபேரவை தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்தநிலையில் சந்திரசேகர் ராவ் மீண்டும் தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சந்திப்பின்போது தெலங்கானாவுக்கு என தனி உயர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் சந்திரசேகர் ராவ் முன்வைத்ததாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு ஏதுவாக தேசிய அளவில் 3வது அணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் சந்திரசேகர் ராவ், பிரிவினை அரசியல் மூலம் பா.ஜ.கவுக்கு உதவி புரிவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Exit mobile version