சந்திரபாபு நாயுடு வீட்டின் முன்பு காவல்துறையினர் நோட்டீஸ்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, அடுத்த 24 மணிநேரத்திற்கு வீட்டுக் காவலில் வைப்பதாக, அவரது வீட்டின் வெளியே, உள்ளூர் காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது முதல், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளதாக
சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி அரசை கண்டித்து பேரணி நடத்த அவர் அழைப்பு விடுத்து இருந்தார். நேற்று காலை பேரணி தொடங்க இருந்த நிலையில், அமராவதியில் உள்ள வீட்டில் சந்திரபாபு நாயுடுவும், அவரது மகன் நாரா லோகேசும் வீட்டுச் காவலில்வைக்கப்பட்டனர். இதை மீறி சந்திரபாபு நாயுடு வெளியே செல்ல முற்பட்ட போது, வீட்டின் பிரதான நுழைவு வாயிலை பூட்டிய காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க சந்திரபாபு நாயுடுவை அடுத்த 24 மணி நேரத்திற்கு வீட்டுக் காவலில் வைப்பதாக காவல்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். பொது அமைதி கருதி நடவடிக்கைக்கு ஒத்துழைக்குமாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version