திருச்சியில் நத்தர்ஷா பள்ளிவாசலில் சந்தனகூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி – மதுரை சாலையில் நத்தர்ஷா என்றழைக்கப்படும் ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹல்வலி பள்ளிவாசலில் ஆயிரத்து 22வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினந்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில், முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, பள்ளிவாசலின் அறங்காவலர்கள் மலர் போர்வை போர்த்தினர். விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. பெரியகடை வீதி, மேலபுலிவார்டு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்ற சந்தனக்கூடு நத்தர்ஷா பள்ளிவாசலை சென்றடைந்தது.