விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தால், விவசாயிகளுக்கு கொரோனா தொற்று பரவும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
செஞ்சி, அனந்தபுரம், பொண்ணங்குப்பம், துத்திப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு,
ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் பயிர்கடன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனை பெறுவதற்காக விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கு உள்ள கிளைகளில், தடையில்லா சான்று பெற்று வரும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனையடுத்து, செஞ்சி பாரத ஸ்டேட் வங்கியில் சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் தடையில்லா சான்று பெற, கடந்த ஒரு வாரமாக முயற்சித்து வருகின்றனர். ஆனால், வங்கி நிர்வாகம் நாளொன்றுக்கு 25 பேருக்கு மட்டுமே டோக்கன் முறையில் தடையில்லா சான்று வழங்குவதோடு, 175 ரூபாய் கட்டணம் கேட்டு பெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகளவில் விவசாயிகள் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.