வளி மண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளி மண்டல சுழற்சி காரணாமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.