வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 தினங்களுக்கு மதுரை, திருச்சி, உட்பட 15 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது.