சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,கடலூர்,நாகை,விழுப்புரம் மற்றும் அரியலூரில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்புகளின் அடிப்படையில் வட கிழக்கு பருவமழை அடுத்த 2நாட்களில் நிறைவு பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொருத்த வரை நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் முதல், குறைந்த பட்சம் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.