தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புயலால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் எனவும், வரும் 25-ம் தேதி காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தென்னிந்திய பெரும்பாலான மாநிலங்களில் இன்று முதல் மழையில் தாக்கம் அதிகரிக்கும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version