வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும், கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர கடலோர பகுதிகள், வடகிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.