தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வங்கக்கடல், தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு ஆகஸ்ட் 27-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version