தமிழகத்தில் 15 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.