அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு, தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட
வானிலையும் நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு குமரிக் கடல் பகுதிகளில், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version