தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாயப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.