அரபிக்கடலில் நிலைக் கொண்டுள்ள டவ்தே புயலால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் அதிதீவிர புயாலாக வலுப்பெற்றுள்ள டவ்தே புயலின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு நீலகிரியில் கனமழையும், 19-ம் தேதி திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.