தென்மேற்கு பருவக்காற்றால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

Exit mobile version