தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்திக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.