இத்தாலியில் அதிவேக ட்ரோன்களுக்கான சாம்பியன்ஷிப் பந்தயம்

இத்தாலியில் அதிவேக ட்ரோன்களுக்கான சாம்பியன்ஷிப் பந்தயம் நடைபெற்றது..

இத்தாலி நாட்டின் டுரின் பகுதியில், அதிவேக டிரோன்களுக்கான சாம்பியன்ஷிப் பந்தயம் நடைபெற்றது. எட்டு அணிகளுடன் தொடங்கிய இந்த போட்டியில் பிரிட்டனை சேர்ந்த எக்ஸ்பிளேடு ரன்னிங் என்ற டிரோன், அபெக்ஸ் ரேசிங் என்ற அதிவேக ட்ரோனை வீழ்த்தியது. இந்த பந்தயத்தில் 1 புள்ளி 6 விநாடிகளில், மணிக்கு 160 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சென்றதால், பொதுமக்கள் இந்த போட்டிகளை பெரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். லீக் போட்டியின் இரண்டு சுற்றுகள் முடிவில், 840 புள்ளிகளுடன் எக்ஸ்பிளேடு ரேசிங், முதலிடத்திலும், 660 புள்ளிகளுடன் அபெக்ஸ் ரேசிங், இரண்டாம் இடத்திலும் உள்ளன. மேலும் இந்த ட்ரோன் சாம்பியன்ஸ் லீக்கின் அடுத்த சுற்று செப்டம்பர் 12-13 ம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது.

Exit mobile version