தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தாவுக்கு தலைவராக நீதிபதி பி.தேவதாசை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர் அதிகாரத்தில் உள்ளவர்களையும் விசாரிக்கக்கூடிய லோக் ஆயுக்தாவை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா தொடர்பான சட்ட மசோதா கடந்த ஆண்டு ஜூலை 9 ம்தேதி நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆனையத்தின் அனுமதி பெற்று லோக் ஆயுக்தா தலைவர் நியமனத்தை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் இருப்பார். ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நீதிப்பிரிவு உறுப்பினர்களாக இருப்பார்கள். ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரி ராஜாராம், வழக்கறிஞர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் பதவிக்கால, 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை ஆகும்.