திருப்பத்தூரில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

திருப்பத்தூர் மாவட்டத்தில், 3 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை, அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நிலோபர் கபீல் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, 2019-2020ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் கலந்து கொண்டு, முதற்கட்டமாக 227 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும், 3 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில், 9 ஆயிரத்து 96 விலையில்லா மிதிவண்டிகள், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. விழாவில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, மாணவர்கள் அரசு சலுகையை பயன்படுத்தி கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version