திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து நிகழ்ச்சியின் பத்தாம் நாளான இன்று ஸ்ரீ நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மை பெற்ற திருத்தலமாக விளங்கும் ஸ்ரீரங்கத்தை, பக்தர்கள் பூலோக வைகுண்டமாக கருதி வழிப்பட்டு வருகின்றனர். இத்திருக்கோயிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் உற்சவமான வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பான ஒன்றாகும்.
இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய பகல்பத்து விழாவின் பத்தாம் நாளான இன்று, ஸ்ரீ நம்பெருமாள், மோகினி அலங்காரம் மற்றும் ஏலக்காய் ஜடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூலஸ்தானத்திலிருந்து காலை 7 மணிக்கு ரங்கநாதர் புறப்பட்டு, பகல்பத்து மண்டபமான அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்