100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலமரங்களில் வசித்து வரும் வெளவால்களை ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள் பாதுகாத்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்த வாத்தியனேந்தல் கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த மரத்தில் பல ஆண்டுகளாகவே வெளவால்கள் குடியிருந்து வருவதாக இந்த கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர். பகலில் ஓய்வெடுக்கும் வெளவால்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் இருந்து வருகின்றனர். இந்த வெளவால்கள் தங்களது கிராமத்தின் அடையாளம் என்றும் போற்றி வரும் அவர்கள், தீபாவளி மற்றும் கோயில் திருவிழா காலங்களில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை பயன்படுத்துவதை தலைமுறை, தலைமுறையாக தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.